பொறியியல் தேர்வு முறையில் புதிய விதி அமல் குறித்து உயர்கல்வித்துறை, அண்ணா பல்கலைகழகம் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பொறியியல் படிப்புகளுக்கான தேர்வு முறையில் கொண்டு வரப்பட்ட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கில், உயர்கல்வி துறை, அண்ணா பல்கலைகழகம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Update: 2019-09-20 11:14 GMT
அண்ணா பல்கலைகழகம் பொறியியல் படிப்புகளுக்கான  செமஸ்டர் தேர்வில் புதிய திருத்தம் கொண்டு வந்தது. அதன் படி மாணவர் ஒருவர் ஒரு செமஸ்டரில் தோல்வியடைந்தால் 3 முறை மட்டுமே மறு தேர்வு எழுத வாய்ப்புகள் வழங்கப்படும். கொடுக்கப்பட்ட மூன்று வாய்ப்புகளிலும் தேர்ச்சியடையாவிட்டால்,  அடுத்த செமஸ்டருக்கு செல்ல முடியாது என விதிமுறை கொண்டு வரப்பட்டது. இதனை ரத்து செய்ய கோரி, மவுலி மற்றும் பிரியதர்சினி உள்ளிட்ட 10 மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று  நீதிபதிகள் சத்திய நாரயணன், சேசஷாயி அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த புதிய தேர்வு நடைமுறையால் 2 மற்றும் 3ஆம் ஆண்டு படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதால் அவர்களுக்கு பழைய நடைமுறையே செயல்படுத்த வேண்டும் என வாதிட்டார்.  இதை கேட்ட நீதிபதிகள், மனுவுக்கு 2 வாரங்களில் பதிலளிக்க உயர்கல்வி துறை மற்றும் அண்ணா பல்கலைகழகத்துக்கு உத்தரவிட்டு,  விசாரணையை அக்டோபர் 10 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்