1 மணி நேரத்தில் 21.3 கி.மீ தூரம் சென்று சாதனை புரிந்த இளைஞர்
கோவையைச் சேர்ந்த இந்த இளைஞர் வித்தியாசமாக சைக்கிளை ஓட்டி பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார்.
கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் தனியார் மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரியாக பணியாற்றி வருபவர் குமார்.
மிதி வண்டி கண்டுபிடிப்பில் ஆரம்பகாலத்தில் பயன்படுத்தப்பட்ட பென்னி ஃபார்த்திங் எனப்படும் மிதி வண்டியை சாதாரணமாக ஓட்டுவதுடன், தமக்கு வேண்டிய அன்றாட சிறு பயணங்களையும் அதில் மேற்கொள்கிறார்.
1800ம் ஆண்டுகளில் பயன்பாட்டில் இருந்த இந்த சைக்கிளை பயன்படுத்துவதில் சில சிக்கல் இருந்ததால் இதன் வடிவம் மாற்றப்பட்டு தற்போது பல வகையான நவீன சைக்கிள்கள் வந்துள்ளன.
ஆனால், பின்புறத்தை விட முன்பாகம் பெரிய சக்கரங்களைக் கொண்ட இந்த சைக்கிளை ஓட்டி வரும் குமார், இதில் பல உலக சாதனைகளையும் செய்துள்ளார்.
இந்த சைக்கிளில், ஒரு மணி நேரத்தில் 21 புள்ளி 3 கிலோ மீட்டர் தூரம் சென்று சாதனை படைத்ததுடன், பொன்முடியிலிருந்து 12 புள்ளி 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கல்லார் வரை உள்ள 22 ஹேர்பின் வளைவுகளை இந்த சைக்கிளில் கடந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்திள்ளார்.
மேலும்,இவர் ஒரே நேரத்தில் கைகளை வலப்புற மற்றும் இடப்புற திசையில் சுற்றுவதிலும் சாதனை படைத்துள்ளார்.