இரவுநேரங்களில் கிராமத்திற்குள் நுழையும் 3 காட்டுயானைகள் : பொதுமக்கள் அச்சம்
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கிராமத்தில் இரவு நேரங்களில் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளால்,பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
குன்னுார் சுற்றுவட்டார பகுதிகளில் பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளதால், கிராம பகுதிகளுக்கு காட்டுயானைகள் படையெடுக்க தொடங்கியுள்ளன. இந்நிலையில் தூதூர்மட்டம் கெரடாலீஸ் பகுதியில் கடந்த 3 நாட்களாக இரவு நேரங்களில் நுழையும் 3 காட்டு யானைகள், அங்கு 7 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சவ்சவ் மற்றும் வாழை மரங்களை சேதப்படுத்தி சென்றன. காட்டுயானைகளால் இரவில் தூக்கத்தை தொலைத்துள்ள அப்பகுதி மக்கள், யானைகளை நிரந்தரமாக விரட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.