முட்டல் நீர்வீழ்ச்சியில் பெருக்கெடுத்த தண்ணீர்

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள முட்டல் நீர்வீழ்ச்சியில் தடுப்பணை அடைக்கப்பட்டதால், தண்ணீர் வீணானது.

Update: 2019-07-13 13:03 GMT
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள முட்டல் நீர்வீழ்ச்சியில் தடுப்பணை அடைக்கப்பட்டதால், தண்ணீர் வீணானது. நேற்று இரவு கல்வராயன் மலைப் பகுதியில் பெய்த மழை காரணமாக முட்டல் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் அருவியாக கொட்டியது. ஆனால், ஏரியின் தடுப்பணை மூடப்படாமல் திறந்து கிடந்ததால், தண்ணீர் தேங்காமல், காட்டாற்று வெள்ளம் போல விவசாய நிலத்திற்குள் புகுந்தது. தடுப்பணை மூடப்பட்டிருந்தால் ஏரி முழுவதும் நிரம்பி குடிநீர் பிரச்சனை தீர்க்கப்பட்டு இருக்கும் என்று  கிராம மக்கள் தெரிவித்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்