பால் கொள்முதலில் மோசடி விவகாரம் : வேலூர் ஆவின் பொதுமேலாளர் சஸ்பெண்ட்
ஆவின் நிறுவனத்தில் நடந்த மோசடி தொடர்பாக, வேலூர் பொது மேலாளர் கோதண்டராமன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் சத்துவாச்சாரியில் ஒருங்கிணைந்த ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு பால் கொள்முதலில் மோசடி நடந்திருப்பது தணிக்கை செய்த பின்னர் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே மூன்று ஊழியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வேலூர் ஆவின் பொது மேலாளர் கோதண்டராமன் திடீரென பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் மேலும் பலர் சிக்குவார்கள் என்றும் கூறப்படுகிறது.