சிமெண்ட் கடை உரிமையாளர் கொலையான சம்பவம் : கொலையாளி கைது - போலீசார் தீவிர விசாரணை
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே சிமெண்ட் கடை உரிமையாளரை அடித்து கொலை செய்த வழக்கில் கள்ளக்காதலனை, போலீசார் கைது செய்துள்ளனர்
கடந்த 16 ஆம் தேதி, காமலாபுரத்தை சேர்ந்த நாராயணன் என்பவர் ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடினார். இது குறித்து தகவலறிந்த உறவினர்கள், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல், நாராயணன் உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில், திடீர் திருப்பமாக சுரேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட நாராயணனின் அண்ணிக்கும், சுரேசுகக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனை கண்டித்த நாராயணனை, சுரேஷ் அடித்து கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. சுரேஷ் கொடுத்த வாக்கு மூலத்தின் பேரில் அவரை கைது செய்த போலீசார் ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.