அரசு பேருந்தையே முந்தி சென்ற அதன் பின்புற டயர் - அதிர்ச்சியில் அலறிய பயணிகள்

Update: 2024-11-07 05:32 GMT

தாம்பரம் - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் அரசுப்பேருந்து வழக்கம்போல தாம்பரத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு செங்கல்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தது... அப்போது சிங்கப்பெருமாள் கோவில் அருகே அரசு பேருந்தின் பின் பக்க சக்கரம் திடீரென கழன்று ஓடிய நிலையில் உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு பயணிகள் மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்... நடுவழியில் நின்ற அரசு பேருந்தால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவியது... குறிப்பாக சிங்கப் பெருமாள் கோவில் பகுதியில் மேம்பால பணிகள் நடைபெறுவதாலும் திடீரென அரசு பேருந்து நடுவழியில் நின்றதாலும் சிங்கப்பெருமாள் கோவில் முதல் கீழக்கரணை வரை 2 கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்