இன்று நள்ளிரவுடன் முடியும் மீன்பிடி தடை காலம் : ஆழ்கடல் செல்ல நாகை மீனவர்கள் தீவிரம்
மீன்பிடி தடை காலம் இன்று நள்ளிரவுடன் முடிவடைவதால் ஆழ்கடல் செல்வதற்கு தேவையான முன்னேற்பாடுகளில் நாகை மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்
மீன்பிடி தடை காலம் இன்று நள்ளிரவுடன் முடிவடைவதால், ஆழ்கடல் செல்வதற்கு தேவையான முன்னேற்பாடுகளில் நாகை மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆயிரத்து 400 விசைப்படகுகள், 5 ஆயிரம் பைபர் படகுகள் கடலுக்கு செல்வதால், அதற்கு தேவையான டீசல், பனிக்கட்டி உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை படகுகளில் ஏற்றிய மீனவர்கள், இஷ்ட தெய்வமான கடல் மாதாவுக்கும், படகுகளுக்கும் பூஜை செய்தனர். மாநில அரசை போல், மானிய டீசலுக்கான சாலை மேம்பாட்டு வரியை மத்திய அரசும் தளர்த்த வேண்டும் என நாகை மீனவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.