"மக்களின் அடிப்படை உரிமைகளை அரசு பறிக்கிறது" - அணு உலை எதிர்ப்பாளர் சுப.உதயகுமார் குற்றச்சாட்டு
மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க வேண்டிய அரசு, அதனை பறிக்கின்ற செயலில் ஈடுபடுவதாக, அணு உலை எதிர்ப்பாளர் சுப.உதயகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க வேண்டிய அரசு, அதனை பறிக்கின்ற செயலில் ஈடுபடுவதாக, அணு உலை எதிர்ப்பாளர் சுப.உதயகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார். நெல்லையில் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக உதயகுமார் சென்றபோது, காவல் துறையினர் கைது செய்ய முயற்சித்தனர். இதனால், அவர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இது குறித்து தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த, சுப.உதயகுமார், ஜனநாயக நாட்டில் கூடி ஆலோசிப்பதற்கு ஜனநாயக உரிமை உள்ளதாகவும் அரசின் கொள்கை திட்டத்தை எதிர்ப்பதற்கு முழு உரிமை உள்ளதாகவும் கூறினார்.