திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாயிடில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாயிடில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாம் தமிழர் நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். 2017ம் ஆண்டு முதல் கட்சியில் பயணிப்பதாகவும் கூட்டணி அமைக்காமல் தனித்து சீமான் செயல்பட்டு வருவதால் கட்சியில் இருந்து விலகுவதாகவும் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர்கள் தெரிவித்தனர். அப்போது, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மற்றொரு தரப்பு நிர்வாகி உள்ளே நுழைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அது கைகலப்பாக மாறி இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். இரும்பு நாற்காலியால் ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை தாக்க முற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.