விடைத்தாள் திருத்துவதில் மோசடி என குற்றச்சாட்டு : விரிவுரையாளர்கள் 10 பேருக்கு குற்றச்சாட்டு குறிப்பாணை
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கல்வி பயிற்சி நிறுவனத்தில் விடைத்தாள் திருத்துவதில் மோசடி நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கல்வி பயிற்சி நிறுவனத்தில் விடைத்தாள் திருத்துவதில் மோசடி நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் 10 பேருக்கு குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டது. அதனை ரத்து செய்யக்கோரி விரிவுரையாளர்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். அதனை விசாரித்த நீதிமன்றம் குற்றச்சாட்டு குறிப்பாணையில் தலையிட்டால் விசாரணை பாதிக்கப்படும் என்பதால் குறிப்பாணையை ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்தது. குற்றச்சாட்டுகள் வராமல் தடுக்க கேள்வித்தாள் தயாரிப்பு, விடைத்தாள் திருத்தம் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் மாநில அரசும், கல்வித்துறையும் இரட்டை எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.