ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்தம் : இறுதி செய்யக் கூடாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

ஆவின் பால் டேங்கர் ஒப்பந்தத்தை இறுதி செய்யக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-06-08 18:39 GMT
ஆவின் பால் டேங்கர் ஒப்பந்தத்தை இறுதி செய்யக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ஆவின் பால் சப்ளை செய்ய, 312 டேங்கர் லாரிகளை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க, தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சம்மேளனம் கடந்த ஜனவரி மாதம் டெண்டர் கோரியது. 2019 முதல் 2021 வரையிலான காலத்திற்கு கோரப்பட்ட இந்த டெண்டரின் மதிப்பு, 360 கோடி ரூபாய். டெண்டரை எதிர்த்து ஏற்கனவே தீபிகா டிரான்ஸ்போர்ட் என்ற ஒப்பந்த நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை டெண்டரை இறுதி செய்யக்கூடாது என உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த உத்தரவை மீறி, டெண்டரை திறக்க தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சம்மேளனம் முடிவு செய்தது. இதை எதிர்த்து ஆர்.கே.ஆர். டிரான்ஸ்போர்ட் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், நீதிபதி எம்.தண்டபாணி, டெண்டரை இறுதி செய்யக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்