ஜார்க்கண்டில் முதல்கட்டமாக நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி வாக்களித்தார். ராஞ்சியில் உள்ள வாக்குச்சாவடிக்கு, தனது மனைவி சாக்ஷியுடன் சேர்ந்து தோனி வாக்களித்தார். வாக்குச்சாவடி அருகே தோனியை கண்டு ரசிகர்கள் உற்சாகமடைந்த நிலையில், போலீசார் பலத்த பாதுகாப்புடன் வாக்களிக்க அழைத்துச் சென்றனர்.