பீகாரில் பிரதமர் மோடியின் காலில் விழுந்து வணங்க பீகார் முதல்வர் நிதீஷ் குமார் முயன்றார். தர்பங்கா ப்குதியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த நிதீஷ் குமார் மேடையில் அமர்ந்திருந்த பிரதமர் மோடியின் காலில் விழ முயன்றார். உடனடியாக பிரதமர் மோடி, நிதீஷ் குமாரை தடுத்து நிறுத்தி, அவருக்கு வணக்கம் செலுத்தினார். சமீபத்தில் இதேபோன்ற சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.