திருப்பி மரண அடி அடித்த SA.. இந்தியாவுக்கு அல்லு இல்ல.. சீட் எட்ஜ் த்ரில்லர்

Update: 2024-11-14 02:47 GMT

3வது டி20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. செஞ்சுரியனில் நடந்த மூன்றாவது டி20 போட்டியில், முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 219 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 24 பந்துகளில் அரைசதம் விளாசினார். திலக் வர்மா சர்வதேச அரங்கில் முதல் சதத்தை பதிவு செய்து கடைசிவரை களத்தில் இருந்தார். 220 ரன்கள் இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்கள் சேர்த்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்