நொய்யல் ஆற்றில் கலக்கும் திருப்பூர் சாயக்கழிவு : காவிரி கூட்டு குடிநீர், வீராணம் ஏரி நீர் பாதிக்கப்படும் அபாயம்

கரூர் மாவட்டம் நொய்யல் ஆற்றில் திருப்பூர் சாய கழிவு நீர் கலப்பதால் சென்னை உள்பட பல மாவட்டங்களுக்கு வழங்கப்படும் குடிநீர் விஷத்தன்மை பரவும் வாய்ப்பு உள்ளதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

Update: 2019-06-07 18:48 GMT
முறைப்படி ஜீரோ டிஸ்சார்ஜ் முறைப்படி மட்டுமே கழிவுநீரை சுத்திகரித்து தண்ணீரை ஆற்றில் விட வேண்டும், என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவுகளை மதிக்காமல் சிறிது மழை பெய்தாலும் உடனடியாக சாயக்கழிவு நீரை நேரடியாக ஆற்றில் கலந்து விடுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால், காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு செல்லும் தண்ணீர் , வீராணம் ஏரிக்கு கொண்டு செல்லப்படும் தண்ணீர் , வீராணத்தில், இருந்து சென்னைக்கு குடிநீருக்கு பயன்படுத்தப்படும், நீர் அனைத்தும் விஷத்தன்மை உடையதாக மாறி விடும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் எச்சரித்துள்ளனர்.  

Tags:    

மேலும் செய்திகள்