இலங்கை தேர்தலில் அசத்தல்.. ஓங்கியது அனுரகுமார திசநாயக்க கை...!

Update: 2024-11-15 03:15 GMT

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் அனுரகுமார திசநாயக்க அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் சக்தி முன்னிலை பெற்றுள்ளது.இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் அதிபர் அனுரகுமார திசநாயக்க அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் சக்தி அறுதி பெரும்பான்மையோடு வெற்றி பெறுவதற்கான எண்ணிக்கையை நோக்கி நகர்ந்து வருகிறது. தபால் வாக்கு எண்ணிக்கையில் 22 தேர்தல் மாவட்டங்களிலுமே தொடக்கம் முதலே முன்னிலை வகித்த NPP, தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையிலும் தொடர்ந்து முன்னிலை பெற்றுவருகிறது. 16 தேர்தல் மாவட்டங்களில் தபால் வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அதில் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று தேசிய மக்கள் சக்தி முன்னிலை வகிக்கிறது. மேலும் தேர்தல் டிவிஷன் வாரியாக வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், இதுவரை வந்துள்ள அனைத்து தொகுதிகளிலுமே, அனுர அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் சக்தியே வெற்றி பெற்றுள்ளது.பதுளை, திஸமஹாராம, தங்காலை, பலபிட்டிய, ரத்கம, யாழ்ப்பாணம், ஹபராதுவ, அக்மீமன, காலி, அம்பலங்கோட, பத்தேகம உள்ளிட்ட தேர்தல் டிவிஷன்களில் தேசிய மக்கள் சக்தி கட்சி முன்னிலை பெற்றுள்ளது. இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி 11 சதவீத வாக்குகளையும் முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவுடன் போட்டியிட்ட தேசிய ஜனநாயக முன்னணி 5 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்