சிறுவனுக்கு நேர்ந்த உச்சகட்ட கொடூரம் நேரில் பார்த்தவுடன் துடிதுடித்த பெற்றோர்
உத்தரப்பிரதேசம், கிரேட்டர் நொய்டாவில், மருத்துவரின் அலட்சியத்தால் ஏழு வயது சிறுவனுக்கு இடது கண்ணிற்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. யுதிஷ்டிரர் என்ற சிறுவன் கண்ணில் பிளாஸ்டிக் போன்ற பொருள் இருந்ததால், செவ்வாயன்று தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ஆனந்த் வெர்மா என்ற மருத்துவர் சிறுவனுக்கு வேறு கண்ணில் அறுவை சிகிச்சை செய்ததால் அதிர்ந்த பெற்றோர், மருத்துவமனையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு புகார் அளித்தனர்.