"பின் பகுதி வழியேஉடலை கொண்டு சென்று விட்டனர்" - தீயில் கருகிய கணவர்... கதறும் மனைவி

Update: 2024-11-15 03:34 GMT

தாந்தோன்றிமலை, சுங்ககேட் அருகில் ISO தரச் சான்று பெற்ற தனியார் கூண்டு கட்டும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, புதிதாக பேருந்து கூண்டு கட்டி முடிக்கப்பட்ட பேருந்தின் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. வெல்டிங் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, தீப்பொறி பட்டு தீ விபத்து ஏற்பட்டது. அந்த பேருந்தில் வேலை பார்த்த அனைவரும் அவசரமாக வெளியேறிய போது, குமாரபாளையத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் என்ற வெல்டர் பேருந்தின் உள்ளே சிக்கிக் கொண்டார். தீ மளமளவென பிடித்து பேருந்து முழுவதுமாக எரிந்து நாசமாயின. தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பேருந்து கதவின் அருகே எரிந்த நிலையில் இருந்த தொழிலாளி ரவிச்சந்திரன் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டது. அவரது உடலை கண்டு மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர் .

Tags:    

மேலும் செய்திகள்