பல்வேறு நாடுகளுக்கு பறக்கும் சுவை நிறைந்த "கொளப்பலூர் முறுக்கு"

ஈரோடு மாவட்டம் கொளப்பலூர் முறுக்கின் சுவையின் ரகசியம் மற்றும் தாயாரிப்பு முறை.

Update: 2019-06-07 09:33 GMT
ஈரோடு - சத்தியமங்கலம் இடையே பேருந்து எங்கு நிற்கிறதோ இல்லையோ, கொளப்பலூரில் கட்டாயம் நிற்கும்... அதற்கு காரணம் மண, மணக்கும் முறுக்கு. கோவை, சத்தியமங்கலம், மைசூர் என்று அந்தப் பக்கம் போகிறவர்கள், கொளப்பலூர் நெருங்கும் போது அலாரம் வைத்தது போல் முழித்துக் கொள்வார்கள். இரவு, பகல் எல்லாம் கணக்கிக்ல்லை. அந்த அளவு கொளப்பலூர் முறுக்கின் சுவையும், வாசமும் அவர்களை சுண்டி இழுக்கும். புதியவர்கள் கூட இரு பாக்கெட் வாங்கி பார்ப்போம் என வாங்குவார்கள். ஆனால் முறுக்கை வாயில் வைத்து சுவைத்தவுடன் இன்னும் அதிக பாக்கெட்டுகள் வாங்கி இருக்கலாமே என நினைப்பார்கள். ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி, கோவை,திருப்பூர் உள்ளிட்ட வார சந்தைகளிலும் கொளப்பலூர் முறுக்கு  பிரபலம். அரிசி - பொட்டு கடலை மூலப்பொருட்களுடன் இரண்டு முறை எண்ணெயில் போட்டு எடுக்கும் புதிய முறையே, முறுக்கின் கூடுதல் சுவைக்கு காரணம்  என்ற ரகசியத்தை ரகசியமாக சொல்கிறார்கள் உற்பத்தியாளர்கள். கொளப்பலூரில் முறுக்கு மற்றும் அதனை சார்ந்த தொழிலே பிரதானமாக உள்ளது. இங்கு எண்ணெய் சட்டியில் வேகும் முறுக்கு வெளி மாநிலங்கள் மட்டுமின்றி சிங்கப்பூர், துபாய்,அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு விமானத்திலும் பறந்து கொண்டிருக்கிறது.
Tags:    

மேலும் செய்திகள்