மீனவர்களின் டீசல் செலவை குறைக்க புதிய கருவியை கண்டுபிடித்த இளைஞர்

ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களின் டீசல் செலவை குறைக்கும் வகையில் புதிய கருவி ஒன்றை கன்னியாகுமரி இளைஞர் கண்டுபிடித்துள்ளார்.

Update: 2019-05-04 23:08 GMT
ஆழ்கடலில் இயந்திர படகு மூலம் மீன்பிடிக்க செல்லும் போது டீசல், மண்நெண்ணெய்க்கு அதிகளவில் செலவு ஏற்படுவதால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு  கன்னியாகுமாரி மாவட்டத்தை சேர்ந்த பொறியியல் தொழில்நுட்ப வல்லுனர் மனோகர் டேனியல் என்பவர் புதிய கருவி ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த கருவியை மீன்பிடி படகுகளில் பொருத்தினால் டீசல் உபயோகத்தில் இருந்து 20 சதவீதம் குறைவாக செலவாகும். சென்னை, புதுச்சேரி மற்றும் ராமேஸ்வரம் என பல்வேறு பகுதி மீனவர்களின் விசைப்படகுகளில் பொருத்தி அதன் பயன்பாட்டை உறுதி செய்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்