செபஸ்தியர் ஆலய திருவிழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே விழப்பள்ளம் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

Update: 2019-05-02 10:50 GMT
புனித செபஸ்தியா் ஆலய திருவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியில், 400 காளைகளும் 200 மாடு பிடி வீரர்களும் பங்கேற்றனர். அரியலூர், திருச்சி, கடலூா், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து அலங்கரித்து கொண்டு வரப்பட்ட 400 க்கும் மேற்பட்ட காளைகள், கிராமத்தின் மையப்பகுதியில்  அமைக்கப்பட்டிருந்த வாடி வாசலிருந்து ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. அப்போது சீறி வந்த காளைகளை, மாடு பிடி வீரர்கள் அடக்க முற்பட்டனர். இதில் 15 பேர் காயமடைந்தனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கம், வெள்ளி காசுகள், சைக்கிள் கட்டில் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
Tags:    

மேலும் செய்திகள்