மாலை 6 மணிக்கே மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் : ஆந்திராவை நோக்கி படையெடுத்த மதுபிரியர்கள்
குடியாத்தம் பகுதியில் நேற்று டாஸ்மாக் கடைகள் மாலையே மூடப்பட்டதால் மதுபிரியர்கள் ஆந்திராவை நோக்கி படையெடுத்தனர்.
குடியாத்தம் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நான்கு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாக மது பற்றாக்குறை காரணமாக இரவு எட்டு மணிக்குள் கடைகள் மூடப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விடுமுறை நாளான நேற்று நகரில் செயல்பட்டு வந்த மூன்று கடைகளும் மாலை ஆறு மணிக்குள் மூடப்பட்டதால் மது பிரியர்கள் இருபது கிலோ மீட்டர் தொலைவில் ஆந்திர மாநில எல்லையையொட்டி அமைந்துள்ள மதுபான கடையை நாடிச்சென்றனர். இதேபோன்று நகரின் அருகாமையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையிலும் மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதியது.