காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைப்பு - 30 அடி உயரத்திற்கு பீச்சி அடிக்கும் தண்ணீர்...
காவிரி கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பல அடி உயரத்திற்கு பீச்சி அடித்து வீணாகி செல்கிறது.
சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே சிறுவயல் கிராமம் வழியாக செல்லும் காவிரி கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பல அடி உயரத்திற்கு பீச்சி அடித்து வீணாகி செல்கிறது. இதனை சரி செய்ய ஊழியர்கள் வராததால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளார். கோடை வெயிலில் தண்ணீருக்காக பல கிலோ மீட்டர் தூரம் அலையும் நிலையில் தண்ணீர் வீணாவது அனைவரையும் வேதனையடைய செய்துள்ளது.