அஜித், விஜய், சூர்யா எதிர் மனுதாரர்களாக சேர்ப்பு : போலியோ முகாம் குறித்த வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி
நடிகர்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுரை
நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை முறையாக, தொடர்ச்சியாக நடத்த உத்தரவிடக்கோரி மதுரையை சேர்ந்த ஜான்சி ராணி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது போலியோ சொட்டு மருந்து முகாம் தொடர்ந்து நடைபெறுவதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. அது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை என்று மனுதாரர் தரப்பில் அப்போது தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், நடிகர்கள் அஜீத், விஜய், சூர்யா மற்றும் தென்னிந்திய நடிகர் சங்க செயலர், ஆகியோரை எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு, வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.