போக்குவரத்து கழக ஊழியர்கள் நியமனம் தொடர்பான வழக்கு - தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் பதிலளிக்க உத்தரவு

வேலைவாய்ப்பு அலுவலக பதிவு செய்தோருக்கு முன்னுரிமை உண்டா?"

Update: 2019-03-07 21:12 GMT
தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் நேர்முக தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக கூறி, திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த கோவை சாமி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் சசிதரன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, போக்குவரத்து கழகத்தில் ஊழியர்களை நியமிக்க எந்த அடிப்படையில் நேர்முக தேர்வு நடத்தப்படுகிறது? என்றும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறதா என்று  கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாக  போக்குவரத்து கழகம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 4 -க்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்