இலவச வீட்டு மனைப்பட்டா கோரி மனு கொடுக்க வந்த பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
இலவச வீட்டு மனைப்பட்டா கோரி, மனு கொடுக்க 50 க்கும் மேற்பட்டோர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.
இலவச வீட்டு மனைப்பட்டா கோரி, மனு கொடுக்க 50 க்கும் மேற்பட்டோர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோரிடம் மனு அளிக்க முற்பட்ட அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர், அப்போது மனு அளிக்க வந்தவர்களில் ஒரு பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு நிலவியது. இதை அடுத்து அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.