நீலகிரி : கடும் பனியால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
நீலகிரி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக தேயிலை, கேரட் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக தேயிலை, கேரட் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஊட்டி, குந்தா, அவலாஞ்சி, தலைகுந்தா, தாவரவியல் பூங்கா பகுதிகளில் இரண்டாவது நாளாக கடும் பனிப்பொழிவு நீடிக்கிறது. கேத்தி பாலாடா, சோலூர் உள்ளிட்ட பகுதிகளில் தேயிலை, கேரட் உள்ளிட்ட பயிர்கள் கருகும் நிலை சூழல் உருவாகியுள்ளது. கடுங்குளிரால் பெட்ரோல், டீசல்கள் உறைந்த நிலை ஏற்படுவதால் வாகனங்களை காலை நேரங்களில் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.