மருத்துவரின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல் - இருசக்கர வாகனத்தில் சென்ற போது சோகம்

சென்னையில், பட்டம் விடப் பயன்படுத்தப்படும் மாஞ்சா நூலால், மருத்துவர் ஒருவர் கழுத்தறுபட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Update: 2018-12-28 12:39 GMT
சென்னையில், பட்டம் விடப் பயன்படுத்தப்படும் மாஞ்சா நூலால், மருத்துவர் ஒருவர் கழுத்தறுபட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரியும் சரவணன் என்பவர், நேற்று வழக்கம் போல தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவர், பெரம்பூர் லோகா பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது, எங்கிருந்தோ பறந்து வந்த மாஞ்சா நூல் அவரது கழுத்தை சிக்கியது. இதையடுத்து நிலை தடுமாறி கீழே விழுந்த சரவணனை சாலையில் சென்றவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சரவணனின் கழுத்தில் மாஞ்சா நூல் ஆழமாக பதிந்ததால் 6 தையல் போடப்பட்டுள்ளது. இதனிடையே தடை செய்யப்பட்ட மாஞ்சா நூலை பறக்க விட்ட நபர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் நடந்த இதே பாலத்தில், கடந்த 2015-ம் ஆண்டில்,  கழுத்தில் மாஞ்சா நூல் அறுத்து அஜய் என்கிற 5 வயது சிறுவன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்