கஜா புயல் - 12 மாவட்ட மின் ஊழியர்களுக்கு விலக்கு அளிக்க கோரிக்கை...
கஜா புயல் நிவாரணத்திற்காக பிடித்தம் செய்யும் ஒருநாள் ஊதியத்தில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் மின் ஊழியர்களுக்கு விலக்களிக்குமாறு தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கஜா புயல் நிவாரணத்திற்காக பிடித்தம் செய்யும் ஒருநாள் ஊதியத்தில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் மின் ஊழியர்களுக்கு விலக்களிக்குமாறு தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மின்வாரியம் சார்பில், ஊழியர்களின் ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்து அந்த தொகையை மின்துறை அமைச்சர் மூலமாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குமாறு தமிழ்நாடு மின்வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநருக்கு மின்வாரிய அனைத்து தொழிற்சங்கத்தினர் கடந்த 23-ம் தேதி கடிதம் அளித்தனர். இதற்கான ஆணை 27- ம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில், 12 மாவட்ட மின்வாரிய ஊழியர்கள், இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.