ஜெயலலிதாவுக்கு எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிப்பு - ஆணையத்தில் அப்பலோ மருத்துவர்கள் வாக்குமூலம்

ஜெயலலிதாவுக்கு எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது குறித்து அப்போலோ மருத்துவர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

Update: 2018-11-29 07:25 GMT
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் முன்பு அப்பல்லோ மருத்துவமனையின் இதயம் மற்றும் மயக்கவியல் துறை மருத்துவர் மீனல் எம்.போரா ,மருத்துவர் சுதாகர் ஆஜராகி வாக்கு மூலம் அளித்தனர். 

கடந்த 2016 ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டதாகவும், இதை தொடர்ந்து ஜெயலலிதாவின் கண்களில் அசைவும், அவர் மெதுவாக மூச்சு விட்டதாகவும் மருத்துவர் மீனல் எம்.போரா தெரிவித்துள்ளார். மறுநாள் 5 ஆம் தேதி அதிகாலை 3.20 மணிக்கு ரத்த ஓட்டம் ஓரளவுக்கு சீரானதை தொடர்ந்து ஜெயலிதாவின் இதயம் தானாக செயல்பட தொடங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 

அப்போது குறுக்கிட்ட ஆணைய வழக்கறிஞர்கள், இதற்கு முன் ஆஜரான மருத்துவர்கள் அனைவரும் எக்மோ கருவி பொருத்திய பின்பு ஜெயலலிதாவுக்கு இதய துடிப்பு இல்லை என சொல்கிறார்கள் ? நீங்கள் முரணாக கூறுவது ஏன் என சரமாரியாக கேள்வி எழுப்ப, அதற்கு மருத்துவர் போரா மறுப்பு தெரிவித்துள்ளார் 

தொடர்ந்து வாக்குமூலம் அளித்த, தீவிர சிகிச்சை பிரிவு தொழில் நுட்ப பணியாளர் கமலேஷ், ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர்களுக்கு, தான்
உள்பட 4 தொழில் நுட்ப பணியாளர்கள் உதவியாக இருந்ததாக தெரிவித்துள்ளார். அறுவை சிகிச்சைக்கு பின் ஜெயலலிதாவின் இதயத்துக்கு மருத்துவர்கள் கூறியபடி தாங்கள் பம்பிங் செய்ததாகவும் கமலேஷ் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்