மழை நீர் சேமிப்பு வசதி இல்லாத கட்டடங்களுக்கு அபராதம் - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மழை நீர் சேமிப்பு வசதி இல்லாத கட்டடங்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பாக பரீசிலிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-08-10 12:00 GMT
தமிழகத்தில் அனைத்து கட்டடங்களிலும் மழைநீர் சேமிப்பு வசதியை உருவாக்க கடந்த 2003ஆம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவை யாரும் முறையாக பின்பற்றவில்லை எனக் கூறி வழக்கறிஞர் தேன்ராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார்.

அதில் மழைநீர் சேமிப்பு வசதி இல்லாத  கட்டடங்களுக்கு அபராதம் விதிக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி ஹுலுவாடி ஜி.ரமேஷ் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் கோரிக்கையை எட்டு வாரங்களில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்