மிக்ஜாம் புயல் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் 18 ஆயிரத்து 400 காவலர்கள் ஈடுபட்ட நிலையில், 6 ஆயிரத்து 560 பொதுமக்கள் மீட்கப்பட்டு, சாலையில் விழுந்த 465 மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் துறை அறிவித்துள்ளது... தேங்கிய மழைநீர் வெள்ளத்தில் சிக்கிய 489 வாகனங்கள் மீட்கப்பட்டு 21,967 உணவு பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது... மருத்துவ உதவி தேவைப்படும் நபர்கள் கர்ப்பிணி பெண்களுக்கு ஆம்புலன்ஸ் வசதிகள் ஏற்பாடு செய்து தரப்பட்டதுடன், வயதான நபர்களுக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்க வழிவகை செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது... சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் சென்னையில் மழைநீர் சூழ்ந்த பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று மீட்பு மற்றும் நிவாரண பணிகளை பார்வையிட்டு துரிதப்படுத்தியுள்ளார்.