உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு - 150 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

Update: 2023-08-07 02:32 GMT

சின்னாளப்பட்டி மீன் மார்க்கெட்டில் கெட்டுப்போன 150 கிலோ மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி மீன் மார்க்கெட்டில் கெட்டுப்போன மீன்கள் விற்பதாக வந்த புகாரை அடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கலைவாணி தலைமையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர். ஆய்வில் கெட்டுப்போன 100 கிலோ மீன்கள் மற்றும் 50 கிலோ ரசாயனம் தடவி பதப்படுத்தப்பட்ட மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்