ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் ஆலோசகராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. ஆலோசகராக இருந்த கம்பீர், கடந்த ஆண்டு கொல்கத்தா அணியில் இணைந்து பிறகு இந்திய அணியின் பயிற்சியாளராகிவிட்டார். லக்னோ அணியில் ஆலோசகர் பதவி காலியாக உள்ள நிலையில், ஜாகீர் கானை ஆலோசகராக நியமிக்க லக்னோ அணி நிர்வாகம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.