உயிரை பணயம் வைத்த யுவராஜ்.. சச்சினை நொறுக்கிய வலி.. உலகத்துக்கே தோனி கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்

Update: 2023-10-02 10:25 GMT
  • 1983ம் ஆண்டு இந்தியா முதல் முறையாக உலகக்கோப்பையை வென்றது. அதற்குப் பிறகு 2003ல் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி... 2007ல் லீக் சுற்றுடன் வெளியேற்றம்..
  • இப்படி உலகக்கோப்பை தொடரில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அடைந்தது இந்தியா... கிரிக்கெட்டின் கடவுளான சச்சினின் கரங்களில் உலகக்கோப்பை தவழாதா என ஏக்கத்தில்          தவித்தனர் ரசிகர்கள்..
  • கடந்த கால காயங்களுக்கு களிம்பு தடவும் விதமாக 2011 உலகக்கோப்பை தொடர் இந்திய துணைக் கண்டத்தில் மீண்டும் நடத்தப்பட்டது.
  • 14 அணிகள் பங்கேற்ற தொடரின் முதல் போட்டியில் வங்கதேசத்தை துவம்சம் செய்தது தோனி தலைமையிலான இந்தியா..
  • அனுபவம் மற்றும் இளம் வீரர்களைக் கொண்ட கலவையாக திகழ்ந்த இந்திய அணி, லீக் சுற்றில் 2ம் இடம் பிடித்து காலிறுதிக்குள்ளும் கால்பதித்தது.
  • கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக சதம் விளாசி ரசிகர்களை ரசித்தார்.
  • ஆல்ரவுண்டராக ஜொலி ஜொலித்தார் யுவராஜ் சிங்... அடுத்தடுத்து அரைசதம் அடித்து அதகளப்படுத்திய யுவராஜ், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக புற்றுநோய்
  • பாதிப்பிற்கு மத்தியில் சென்னையில் சதம் விளாசியது போராட்டத்தின் சாட்சி...
  • காலிறுதியில் வலிமையான பாண்டிங் படையை எதிர்கொண்டது இந்தியா.. பாண்டிங்கின் அபார சதத்தால் ஆஸ்திரேலியா 260 ரன்கள் எடுத்தது. சேஸிங்கில் சச்சினும் கம்பீரும் அரைசதம் அடித்தனர். யுவராஜ் சிங் மீண்டுமொரு அரைசதம் அடித்தார். ரெய்னா கேமியோ இன்னிங்ஸ் ஆட, 14 பந்துகள் மீதமிருக்கும்போதே இலக்கை எட்டியது இந்தியா...
  • மொஹாலியில் நடைபெற்ற அரையிறுதியில் பாகிஸ்தானை இந்தியா மீண்டுமொரு முறை வீழ்த்தியது. அன்று சச்சின் பக்கம் அதிர்ஷ்ட காற்று வீசியது. சச்சின் அளித்த கேட்ச்களை பாகிஸ்தான் வீரர்கள் தவறவிட, அவரடித்த 85 ரன்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தன.
  • இலங்கையுடன் இறுதிப்போட்டி... சச்சினின் சொந்த ஊரான மும்பையில்... முதலில் ஆடிய இலங்கை ஜெயவர்த்தனேவின் அதிரடி சதத்தால் 274 ரன்கள் குவித்தது. இலக்கை துரத்தியபோது சேவாக் 2வது பந்திலேயே ஆட்டம் இழந்தார். சச்சினும் சற்றுநேரத்தில் ஆட்டமிழந்து தலைகுனிந்தபடி பெவிலியன் திரும்பினார்.
  • கனவு கைகூடாதா என ரசிகர்களின் மனம் படபடக்கத் தொடங்கியபோது களத்தில் கைகோர்த்தது கம்பீர்-கோலி ஜோடி... இருவரும் நேர்த்தியாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர்.
  • கோலி ஆட்டமிழந்தபிறகு யுவராஜ் வருவார் என எதிர்பார்க்கப்பட்டபோது, தோனி முன்கூட்டியே களமிறங்கி களமாடத் தொடங்கினார். கம்பீர்-தோனி ஜோடி ரன் ரேட்டையும் வேகப்படுத்தியது.
  • இருவரும் அரைசதம் அடித்த நிலையில், 97 ரன்களுக்கு துரதிர்ஷ்டவசமாக கம்பீர் ஆட்டமிழந்தார். சிக்சருடன் ஆட்டத்தை ஃபினிஷ் செய்து மாயம் செய்தார் மகேந்திரசிங் தோனி... சச்சினின் கனவு நனவானது. ரசிகர்களின் 28 ஆண்டு கால தாகம் தணிந்தது.
  • 2011 உலகக்கோப்பையை சச்சினுக்கு சமர்ப்பிப்போம் என கங்கணம் கட்டிக்கொண்டு இந்திய வீரர்கள் களமாடினர். கிரிக்கெட்டின் கடவுள் சச்சினின் கரங்கள் பட்டபிறகுதான், உலகக்கோப்பையும், அதற்கான அர்த்தத்தை முழுமையாக அடைந்தது.

Tags:    

மேலும் செய்திகள்