"தோனியை மன்னிக்கவே மாட்டேன்".. ஆவேசமாக பேசிய யுவராஜ் சிங்கின் தந்தை - என்ன காரணம்?

Update: 2024-09-02 11:54 GMT

2011-ம் ஆண்டு உலகக்கோப்பைக்குப் பிறகு புற்றுநோய் பாதித்து யுவராஜ்சிங் சிகிச்சை பெற்று வந்தார். பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு குணமடைந்த போதிலும், அதன்பின் இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பு கிடைக்கவில்லை. இதுகுறித்து அப்போதே பேசிய யுவராஜின் தந்தை யோக்ராஜ்சிங், தோனி தான் தனது மகனை அணியில் இடம்பெறச் செய்யவில்லை என்று கூறியிருந்தார். இந்நிலையில், தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த அவர், தான் தோனியை மன்னிக்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

தோனி மிகப்பெரிய கிரிக்கெட் வீரர் தான்... ஆனால், தனது மகனுக்கு எதிராகச் செயல்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். தோனி தனது மகனின் வாழ்க்கையையே அழித்துவிட்டதாகவும், இல்லாவிட்டால் யுவராஜ் இன்னும் 4 அல்லது 5 ஆண்டுகள் விளையாடி இருப்பார் என்றும் யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்