இந்தியாவில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான 'கூச் பெஹர் கோப்பை' என்ற உள்ளூர் கிரிக்கெட் தொடர் ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டு தொடரின் இறுதிப்போட்டியில், மும்பை மற்றும் கர்நாடக அணிகள் களம் கண்டன. இதில், முதல் இன்னிங்ஸில் மும்பை அணி 380 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பின்னர் களமிறங்கிய கர்நாட்க அணியின் தொடக்க வீரர் பிரகார் சதுர்வேதி... ஆரம்பம் முதலே மும்பை பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். அதிரடியாக விளையாடிய சதுர்வேதி, 638 பந்துகளில் 46 பவுன்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் விளாசி, 404 ரன்கள் குவித்தார். இதற்கு முன், 1999ஆம் ஆண்டு தோனி அங்கம் வகித்த பீகார் அணிக்கு எதிரான கூச் ஹெபர் கோப்பை இறுதிப்போட்டியில், பஞ்சாப் அணிக்காக களம் கண்ட யுவ்ராஜ் சிங், 358 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டார். அவரது இமாலய சாதனை 25 ஆண்டுகளுக்கு பிறகு முறியடிக்கப்பட்டுள்ளது.