உலகக்கோப்பை புள்ளிப்பட்டியல்..ஓடிப்பிடித்து விளையாடும் அணிகள்..எகிறும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு

Update: 2023-10-27 04:36 GMT

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் இந்தியா முதல் இடத்தில் நீடிக்கிறது. 8 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா 2ம் இடத்தில் உள்ளது. அதே 8 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து 3ம் இடத்தில் உள்ளது. 6 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா 4வது இடத்தில் உள்ளது. 4 புள்ளிகளுடன் இலங்கை 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

4 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் 6வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 7வது இடத்திலும் உள்ளன. 2 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் வங்கதேசம் 8வது இடத்திலும் இங்கிலாந்து 9வது இடத்திலும் நெதர்லாந்து கடைசி இடத்திலும் இருக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்