TNPL டி20 கிரிக்கெட் - சொந்த மண்ணில் சாதித்து காட்டிய சேலம்

Update: 2024-07-09 05:15 GMT

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் ஆறாவது லீக் போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. சேலத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி, 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய சேலம் அணி, 18 புள்ளி ஒரு ஓவரில் வெறும் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி வாகை சூடியது. 

Tags:    

மேலும் செய்திகள்