தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என்.பி.எல்., எட்டாவது சீசன் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் மதுரை மற்றும் திருப்பூர் அணிகள் மோதியது. 'டாஸ்' வென்ற திருப்பூர் அணியானது முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் மதுரை அணி ஒன்பது விக்கெட் இழப்புக்கு 156 ரன்களை குவித்தது. மதுரை அணிக்காக விளையாடிய, கவுசிக் 28 ரன்களும், சசிதேவ் 41 ரன்களும் சேர்த்தனர். திருப்பூர் அணி சார்பில் விளையாடி அஜித் ராம் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.பின்னர் விளையாடிய, அனிருத் சீதாராம் அரைசதம் அடித்து கைகொடுக்க, 18.2 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து திருப்பூர் அணி வெற்றி வாகை சூடியது. திருப்பூர் அணியின் முகமது அலி ஆட்டமிழக்காமல் 33 ரன்கள் எடுத்தார். மதுரை அணிக்காக முருகன் அஷ்வின் நான்கு விக்கெட் வீழ்த்தினார்.