ஐபிஎல் தொடரில் இன்று பிற்பகல் நடைபெறும் போட்டியில் டூபிளசிஸ் தலைமையிலான பெங்களூரு அணியும் ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோத உள்ளன. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. இதுவரை நடைபெற்ற 6 போட்டிகளில் 4 போட்டிகளில்
வெற்றி பெற்ற கொல்கத்தா அணி, 2ல் தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது. அதே போல், பெங்களூரு அணி 7 போட்டிகளில் 6ல் தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.....
இதே போல் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு லீக் போட்டியில், பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன. சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் மைதானத்தில் இந்த போட்டி தொடங்குகிறது. புள்ளி பட்டியலில் 8ஆவது இடத்தில் குஜராத் அணியும், 9ஆவது இடத்தில் பஞ்சாப் அணியும் நீடிக்கும் நிலையில், இரு அணிகளும் வெற்றி பெற போராடும் என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.....