சிராஜ்க்கு பதக்கம் அணிவித்த யுவராஜ் சிங்

Update: 2024-06-13 10:22 GMT

டி20 உலகக்கோப்பை தொடரில் அமெரிக்காவிற்கு எதிரான நேற்றைய லீக் போட்டியில் இந்திய அணியின் சிறந்த ஃபீல்டராக முகமது சிராஜ் தேர்வு செய்யப்பட்டார். கடந்த உலகக்கோப்பை தொடரில் இருந்து ஒவ்வொரு போட்டி முடிவிலும் இந்திய அணியில் சிறப்பாக ஃபீல்டிங் செய்தவருக்கு பதக்கம் வழங்கப்பட்டடு வருகிறது. நேற்றைய போட்டியில் எல்லைக் கோட்டருகே சிராஜ் அற்புதமாக ஒரு கேட்ச் பிடித்த நிலையில் முன்னாள் வீரரும் பீல்டிங் ஜாம்பவானுமான யுவராஜ் சிங்,, சிராஜ்க்கு பதக்கம் அணிவித்து பாராட்டினார். இதுதொடர்பான காட்சிகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.]

Tags:    

மேலும் செய்திகள்