டெஸ்ட் தொடரை ஒயிட்வாஷ் செய்து இலங்கை அசத்தல்

Update: 2024-09-29 20:14 GMT

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில், இன்னிங்ஸ் மற்றும் 154 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது. காலேவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இலங்கை 602 ரன்களும், நியூசிலாந்து 88 ரன்களும் எடுத்தன. ஃபாலோ ஆன் காரணமாக தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து 360 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆட்டநாயகன் விருதை கமிந்து மென்டிசும், தொடர் நாயகன் விருதை பிரபாத் ஜெயசூர்யாவும் வென்றனர். இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, இலங்கை அணி ஒயிட்வாஷ் செய்தது.

Tags:    

மேலும் செய்திகள்