இரானி கோப்பை டெஸ்ட் போட்டியில் மும்பை வீரர் சர்ஃப்ராஸ் கான் இரட்டைச் சதம் விளாசி அசத்தியுள்ளார். லக்னோவில் மும்பை மற்றும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிகள் இரானி கோப்பை டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. மும்பை அணி 2ம் நாள் ஆட்ட முடிவில் முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 536 ரன்கள் எடுத்துள்ளது. அபாரமாக விளையாடிய மும்பை வீரர் சர்ஃப்ராஸ் கான் இரட்டைச் சதம் விளாசி 221 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.