"அங்கே சென்றால் மன அழுத்தம் ஏற்படுகிறது" - CSK கேப்டன் வேதனை

Update: 2024-05-02 13:25 GMT

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மேட்ச்சில் ஜெயிப்பதை விட டாஸில் ஜெயிப்பது பெரும் சவாலாக இருந்து வருகிறது. காரணம் இதுவரை விளையாடிய பத்து போட்டிகளில் 9 போட்டிகளில் சென்னை அணியின் கேப்டனான ருதுராஜ் டாஸை இழந்திருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ருத்ராஜ், எனது டாஸ் சாதனையை பார்த்து எங்களது அணியின் பெரும்பாலான வீரர்கள் நான் டாஸில் தோற்பேன் என தெரிந்து முதலில் பேட்டிங் செய்ய தயாராகிவிடுகின்றனர் என தெரிவித்துள்ளார். மேலும் டாஸில் ஜெயிப்பது எப்படி என்று தீவிரமாக பயிற்சி எடுத்து வருவதாகவும், பயிற்சியின்போது டாஸில் வெற்றிபெற்றாலும் களத்தில் மீண்டும் மீண்டும் தோற்பதாகவும் கூறியுள்ளார். டாஸ் போடுவதற்கு களத்திற்குள் வரும் போதெல்லாம் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாவதகாவும் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்