ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று தாயகம் திரும்பிய இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமிர்தசரஸ் வந்தடைந்த ஹாக்கி அணி வீரர்களை அமைச்சர் குல்தீப் சிங் தலிவால், காங்கிரஸ் எம்பி குர்ஜீத் சிங் அவுஜ்லா மற்றும் உறவினர்கள் மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்.