இன்ஸ்டாவில் முட்டிக் கொண்ட ஹர்திக்- ரோகித்? - MI அணியில் விழும் விரிசல்
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்ட பிறகு மும்பை அணி வீரர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
கேப்டன் பதவியில் இருந்து ரோகித் விடுவிக்கப்பட்டது தொடர்பாக பயிற்சியாளர் பவுச்சர் அளித்த விளக்கத்துக்கு, ரோகித் மனைவி ரித்திகா ஏற்கனவே அதிருப்தி தெரிவித்து இருந்தார். இந்நிலையில், ரோகித் மற்றும் ஹர்திக் பாண்டியாவின் இன்ஸ்டா கணக்கில், பின்தொடர்பவர்கள் பட்டியலில் இருவரது பெயரும் பரஸ்பரம் இடம்பெறவில்லை. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் மீண்டும் உரசல் ஏற்பட்டு இருக்கிறதா என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.