இதையடுத்து 99 ரன்களில் இருந்த ஜடேஜா, சதமடிப்பதற்காக சர்ஃப்ராஸ் கானின் விக்கெட்டை பலி கொடுத்து விட்டதாக ரசிகர்கள் விமர்சனம் செய்தனர். இந்நிலையில் சர்ஃப்ராஸ் கானின் ஆட்டம் குறித்து ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். அதில் தனது தவறான அழைப்பால் சர்ஃப்ராஸ் கான் ஆட்டமிழந்ததாக வருத்தம் தெரிவித்துள்ள ஜடேஜா, அவர் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாகவும் பாராட்டியுள்ளார்.