சர்வதேச சாம்பியன்ஷிப் - இந்திய வீராங்கனை சாதனை

Update: 2023-08-06 12:03 GMT

ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரில் நடைபெறும், உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடரில், 17 வயதே ஆன இளம் இந்திய வீராங்கனை அதிதி, தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். பெண்கள் தனிநபர் பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில், மெக்சிகோ வீராங்கனை ஆன்ட்ரியா பிசெர்ராவை, 149-க்கு 147 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தினார். இதனால் தனிநபர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை அதிதி படைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்